இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது , இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ளார். நவம்பேர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில் சர்வதேச அளவிலான கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் உக்ரைன் ரசியா போர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நேற்று இந்தோனேசியா சென்ற பிரதமர் ஜோங் பைடேன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்களை ஆகியோர்களை சந்தித்து கை குலுக்கினார்.
அதையடுத்து இன்று தொடங்கிய மாநாட்டில் டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு 2023, நவம்பர் 30 வரையில் ஜி20 மாநாட்டின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஒரு வருடத்திற்கு ஜி 20 அமைப்பிற்கு இந்தியா தான் தலைமை பொறுப்பை வகிக்கவுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.