அயோத்தி சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!!
சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் நான் தவறாக பேசவில்லை என்றும்.., சனாதன கோட்பாடுகளை ஒழித்தே ஆக வேண்டும் என்று தான், நான் பேசினேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.., “இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், நான் கலைஞரின் பேரன், மன்னிப்பும் கேட்க மாட்டேன்” என கூறியுள்ளார்.
நான் தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்.., செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு நிற்க மாட்டேன், மற்றவர்களை போல எனக்கு மாத்தி பேசும் பழக்கம் எனக்கு கிடையாது, அந்த மாநாட்டில் நான் என்ன பேசினேன் என எனக்கு தெரியும். அது மக்களுக்கும் புரியும், இதற்கு இடையில் யாரும் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்.
நான் சனாதனத்தை தான் ஒழிக்க வேண்டும் என கூறினேன்.., அது தவறு என்றால் மக்கள் என்னை கேட்கட்டும் என கூறினார்.
Discussion about this post