மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரத் நியாய சன்ஹிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரத் நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்தியச் சாட்சிகள் சட்டத்தை பாரத் சாக்ஷ்யா எனவும் பெயர் மாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதா எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச சன்கிதா, பாரதீய சாக்சிய… என கடைசி நாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு. உதடுகளில் திருக்குறள்…பாரதி… உள்ளம் முழுக்க இந்திவெறி. இது பாஜகவின் உண்மை முகம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா, சுரக்ச
சன்கிதா, பாரதீய சாக்சிய…கடைசிநாளில் 512 பக்க மசோதாக்கள் அவசரமாக தாக்கல்.
இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு.
உதடுகளில் திருக்குறள்…பாரதி…
உள்ளம் முழுக்க இந்திவெறி.பாஜகவின் உண்மை முகம். pic.twitter.com/WZsricuRQG
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 12, 2023
Discussion about this post