கூலிப்படையாக மாறும் மதுரை சிறுவர்கள்..! இதற்கு பின்னனி யார்..?
மதுரையில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் 206 சிறுவர்கள்.., குற்றச்செயலில் ஈடுபட்டதின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 2263 பேரிடம் இருந்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும், அதன் பெயரில் 1685 சிறுவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 740 சிறுவர்கள் வழிப்பறி சம்பந்தவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் கூலிப்படையாக இயங்கி வருவதாகவும், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காவல் துறையினரிடம் விசாரித்த போது, ஆரம்பத்தில் சிறு சிறு கடை உரிமையாளர்களிடம் காசு கேட்டு மிரட்டுவது, என தொடங்கி திருட்டு, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து மற்றும் கொலை என சிறை செல்கின்றனர்.
அங்கு உள்ளவர்களிடம் பழகி ஜாமினில் வெளிவந்து, கூலிப்படையாக மாறி விடுகின்றனர். இவர்களை பிடிக்கச் சென்றால், அவர்கள் பின்னே சில முக்கிய பிரமுகர்கள் உள்ளதால் எங்களால் எந்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post