திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி MP குறித்து மதுரை அதிமுக மாநாட்டில் தவறாக பாடல் பாடிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களான கனிமொழி, ஆ.ராசா ஆகியோரை அவதூறாக விமர்சிக்கும் வகையில் ஒருவர் பாடியது சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுக்குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைய தலைவர் AS குமரி அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது..
பின்பு செய்தியாளரை அளித்த மகளிர் அணி நிர்வாகி கூறுகையில், கடந்த 20-ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி அவர்களை
தரைகுறைவாக கருத்து கொண்டு பாடல் பாடுகிறார் அங்கு இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் அதனை கைதட்டி சிரிக்கிறார்கள்.
நாட்டின் ஆளுமைகளிள் ஒருவர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் அவர்களை தாரைக்குரவைக பேசியவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் மகளிர் ஆணைய தலைவர் AS குமரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இது குறித்து மகளிர் அணி சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் புகார்அளிக்கபட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க விட்டால் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர் .
Discussion about this post