நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வது போல் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கும் போதெல்லாம் சமஸ்கிருதத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “தமிழியக்கம்” ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் இயக்க நிறுவனர் தலைவர் முனைவர் கோ விஸ்வநாதன், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
தொடர்ந்து மேடையில் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி பேசியதாவது,
1918 மார்ச் 30, 31 ஆம் தேதிகளில் பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடைபெற்றது. நெல்லுக்கு இறைத்ததது புல்லுக்கும் கிடைத்தது போல் தமிழுக்கு கிடைத்தது போல் சமஸ்கிருதத்திற்கும் கிடைத்தது 2004 ஆம் ஆண்டு தமிழுக்கு அந்தஸ்து கிடைத்தது. 2005 ஆம் ஆண்டில் தான் சமஸ்கிருதம் அதை பெற்றது.
மொழியை மக்கள் போர் கருவியாக பார்க்க வேண்டும். எதிரிகள் கண்ணுக்கு தெரியாத அளவில் செயற்கை நுண்ணறிவு உள்ளது. ஒரே நாடு ஒரே மொழி என்கிறார்கள், அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை. களத்தில் நின்று உரிமையை காத்து மொழியை காக்க வேண்டிய நிலை உள்ளது. போராளிகளாக தமிழ் போராளிகளாக மாறுங்கள் தன்மானத்தை விட அதிகமாக தமிழ் மானத்தை வேண்டும் என பேசினார்.