போதைபொருளுக்கு பேர் போன இடம் குஜராத்..!! மோடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!! சேலத்தை அதிர வைத்த அந்த சொல்..!!
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. அதில் முதற் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார்.
திமுகவை தாக்கிய மோடி :
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை தலைவிரித்து ஆடுகிறது. போதைபொருள் மட்டுமா ஆடுது ஊழலும் தலை ஓங்கி நிற்கிறது. போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக பாஜக செயல்பட வேண்டும். அதற்கு தலைவராக சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
சேலத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் :
இந்நிலையில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரிக்க தொடங்கினார்.
ஸ்டாலின் பதிலடி :
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் போதப்பொருள் புழக்கம் தமிழ்நாட்டில் தான் அதிகம் புலங்குகிறது என சொன்னார். எங்கள் ஆட்சியில் தான் போதைபொருள் புழக்கம் என சொன்னால். நாங்க என்ன நேற்றா அரசியலுக்கு வந்தோம். காலம் காலமாக மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறோம். போதைபொருட்களை விற்று தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால்.., நாங்கள் அதை எப்போவோ செய்து இருப்போமே. அது ஏன் இப்போது தான் செய்ய தோணுமா. சரி எங்கள் கட்சியில் இருந்த ஒருவர் போதைபொருட்கள் விற்பனை செய்தார் என தெரிந்தவுடன் கட்சியை விட்டு நீக்கிவிட்டோம்.., அவரை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். அது மாதிரி நீங்கள் செய்வீர்களா.
இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல…,
இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் சப்ளை ஆகிறது. தமிழகத்தில் கஞ்சா வழக்கில் பிடிப்படுபவர்கள் எல்லாம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
இவ்வளவு ஏன் ஒரு காலத்தில் குஜராத்தின் முதலமைச்சராக இருந்ததே நீங்க தானே..? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது..? ஏன் இதை நீங்க தடுத்து நிறுத்த வேண்டியது தானே.., நான் முதலமைச்சர் ஆனா நீங்க பிரதமர் என்னை விட அதிக பலம் கொண்ட நீங்கள் ஏன் தடுத்து நிறுத்தவில்லை.
இதற்காவது வாயை திறப்பீர்களா..? இல்லை இதற்கும் நீங்கள் மௌனகுருவா என சரமாரியாக பதில் அடி கொடுத்துள்ளார்.
டாப் 10ல் பாஜக ஆளும் மாநிலங்கள் :
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை. மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் மத்திய அரசு வைத்த அறிக்கையில் நீங்களே குறிப்பிட்டு இருந்தது.
அதுமட்டுமல்ல, போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பாஜக தான் ஆட்சி செய்து வருகிறது. இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை.., அந்தளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை நமது திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.
அவதூறு பேச்சு :
பிரதமர் மோடி அவர்களே… உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே… உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன வன்மம்..? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி.., தமிழ்நாட்டு மக்களையும், எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்…
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… உங்களுக்குச் சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன்… போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள்.
அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்..?
தைரியம் இருந்தா என் மேல வழக்கு போட்டு பாருங்க.. லிஸ்ட்டை கையில் வைத்து மோடிக்கு சவால்விட்டவுடன் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது…
பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி. இதுவரைக்கும் எத்தனையோ பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருக்கிறோம்… அவர்கள் ஆட்சியில் நாட்டிற்குச் செய்ததைச் சொல்வார்கள்… அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்… ஆனால் பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்.” என கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..