ஆயிரம் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு..!! நெட்பிளக்ஸ் புதிய அப்டேட்..!!
என்ன தான் புதிய படங்கள் தயாரிக்கப் பட்டாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் திரையில் வெளியாகிறது. ஒரு சில படங்கள் நெட்பிளாக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்றவற்றில் வெளியாகிறது. இந்நிலையில் நெட்பிளக்ஸ் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பிரிவில் ஆயிரம் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர இருப்பதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் அமெரிக்காவில் அது எதிர்மறையான சர்ச்சையாக மாறியுள்ளது.
ஹாலிவுட் திரை எழுத்தாளர்கள் நெட்பிளாக்ஸ், டிஸ்னி அமேசான் போன்ற படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் ஊதியத்தை உயர்த்தி தர கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதார் மற்றும் மார்வெல் பட வரிசையில் இன்னும் சில புதிய படங்கள் வெளியீடு செய்வதில் தாமதம் ஆகியுள்ளது.
நெட்பிளாக்ஸில் சப்ஸ்கிரைப் செய்து புதிய படம் பற்றி எந்த அப்டேட்டும் வராததால் பயனாளர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post