களத்தில் இறங்கிய திமுக தொண்டர்கள்..!! அயோத்தி சாமியார் மீது ஆவேசம்..!!
உதயநிதியின் தலையை வெட்டினால் 10 கோடி பரிசு என அய்யோதி சாமியார் அறிவித்திருந்தார். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள், அயோத்தி சாமியாரின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். என பேசினார், ஆனால் அவர் பேசியதை அப்படியே மாற்றி பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ”ஒட்டுமொத்த இந்தியாவும் சனாதனம் குறித்து பேசி” நோயை விட அதி வேகமாக பரப்பி கொண்டு இருக்கிறது, (இன அழிப்பு) என நான் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். சனாதனம் என்ற கோட்பாட்டை ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினேன். இனிமேலும் அப்படிதான் பேசுவேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். என கூறினார்.
சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு இன்னும் ஓயாத நிலையில் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி பரிசாக வழங்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா கூறியிருந்த அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி “தலையை சீவுவதற்கு எதற்கு பத்து லட்சம்..? பத்து சீப்பு இருந்தால் போதுமே”.. என பதிலடி கொடுத்தார்.
மேலும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அயோத்தி சாமியார் திமுக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு நேற்றைய முன்தினம் கொலை மிரட்டல் விட்டார் “அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10கோடி, 10 கோடி போதவில்லை என்றால் இன்னும் தருவேன்” என சொல்லியிருந்தார்.
அதற்கு ஆவேசமான திமுக தொண்டர்கள் வேலூர் மாவட்டத்தில் சாமியாரின் உருவ படத்தை எரித்து.., சாமியார் ஒழிக, சனாதனம் ஒழிக என கோஷமிட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post