விஷசாரய வழக்கு சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து விசாரணை செய்ய டிஎஸ்பி சசிதர் தலமையில் குழு நேரில் சென்று விசாரணை தொடங்கி உள்ளனார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் விஷச்சாரயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை விசாரணை அதிகாரியாக ஏ டி எஸ் பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே பெருங்கருணை என்ற கிராமத்தில் விஷச்சாரயம் குடித்து எட்டு பேர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டு இன்று விஷச்சாரயம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறை தொடங்கினர்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கிறது. மாவட்ட அளவில் இருக்கக்கூடிய சிபிசிஐடி அதிகாரிகளை விசாரணை அதிகாரிகள் நியமித்தும்
மேலும் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இருந்து செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு டிஎஸ்பி சசிதர் மற்றும் வேல்முருகன்,செல்வகுமார், ஆகியோர் தலைமையில் குழுவானது நேரில் விசாரணையை தொடங்கி உள்ளனர்
Discussion about this post