பாஜக செயலாளர் இப்ராஹிம் கைது..!! வேலூரில் பரபரப்பு..!!
பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்க வந்த பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குடியாத்தத்தில் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள தரணம் பேட்டை பகுதியில், பாஜக மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனைகள் குறித்து இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான தரணம் பேட்டை, சித்தூர் கேட் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி வேலூர் பாஜக செயலாளர் இப்ராஹிம் தலைமையில் முக்கிய வீதிகளில் வழங்கியுள்ளனர்.
மேலும் இதனை தொடர்ந்து தரணம் பேட்டை உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில், இப்ராஹீம் வருவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பாஜக செயலாளர் இப்ராஹீம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிமை குடியாத்தம் போலீசார் பாஜக செயலாளர் இப்ராஹீம்மை கைது செய்தனர், இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.