தேனி அரசு மருத்துவமனையில் அட்டூழியம் செய்யும் ஊழியர்கள்..!! அதிரடியான முடிவை எடுத்த அமைச்சர்..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் மருத்துவமனையில் பணியாற்றும் சக ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக இது நடந்து கொண்டு இருக்க இது குறித்து மருத்துவதுறை அமைச்சர் “மா.சுப்பிரமணி” அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலின் பெயரில் திடீரென தேனி அரசு மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், அங்கு சோதனையிட்டு நோயாளிகளிடம் விசாரித்துள்ளார், அப்பொழுது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது உறுதியானது.
எனவே நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். பொது தனியார் கூட்டில் (PPP Mode) ஒப்பந்தத்தில் உள்ள கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொண்டு பரிசோதனை செய்ததால் ஒப்பந்தம் ரத்து செய்தாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post