வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல்..!! எந்த தொகுதியில் யார் தெரியுமா..?
மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை சென்னையில் நேற்று காலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பாபு,
வேலூரில் பசுபதி,
நீலகிரி யோகேஷ் தமிழ்ச்செல்வன்
சிவகங்கையில் சேகர்தாஸ்,
திருவண்ணாமலையில் கலியபெருமாள்,
தருமபுரியில் அசோகன்,
தூத்துக்குடியில் சிவசாமி வேலுமணி,
பெரம்பலூரில் சந்திரமோகன்,
திருப்பூரில் அருணாச்சலம்,
ஸ்ரீபெரும்புதூரில் பிரேம்குமார்,
கள்ளக்குறிச்சியில் குமரகுரு,
திருச்சியில் கருப்பையா,
கோவையில் ராமச்சந்திரன்,
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வாணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஐந்து தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..