பல பெண்களிடம் வசீகரமாக பேசி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டும் வாலிபர்..! இவரை கண்டால் உஷாராக இருக்கவும்..!!
திருவள்ளூர் மாவட்டம் மேல அய்யம்பாக்கம் பகுதியை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் டெலிகிராம் மூலம் ஒரு குரூப் ஒன்றை கிரியேட் செய்துள்ளார். அந்த குரூப்பில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவியும் இணைந்துள்ளார்.
அந்த மாணவியிடம் நூதனமாக பேசி இன்ஸ்டாகிராம் ஐடி வாங்கி.., இன்ஸ்டாவில் அந்த மாணவி பதிவிட்டுள்ள போட்டோக்களை வைத்து மார்பிங் செய்துள்ளார். அதை அந்த பெண்ணிடம் காட்டி மிரட்டியும் உள்ளார், ஆடையில்லாமல் வீடியோ கால் செய்து பேசவில்லை என்றால் இந்த மார்பிங் புகை படங்களை இணைய தளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அதனால் அந்த மாணவியும் ஆடையில்லாமல் வீடியோ கால் செய்து பேச அதையும் ரெகார்ட் செய்துள்ளார்.. இந்த வீடியோ மற்றும் மார்பிங் செய்த புகைபடம் அனைத்தையும் வைத்து போலி இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்றை உருவாக்கி.., அந்த மாணவியின் தம்பிக்கு அனுப்பி 2 லட்சம் பணம் தரவில்லை என்றால் இணையத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.. புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீசார் யோகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.., அப்பொழுது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யோகேஷ்குமாரின் போனை பறிமுதல் செய்த பின் தான் அதில் தேனி மாணவி மட்டுமின்றி பல பெண்களை ஆபாசமாக மார்ப்பிங் செய்த புகை படங்கள் மற்றும் வீடியோ இருப்பதை கண்டு அதிருந்துள்ளனர்.
இதுபோன்ற கொடூர செயலில் யார் ஈடுபாட்டாலும் பெண்கள் தயங்காமல் வந்து போலீசில் புகார் அளிக்குமாறு தேனி சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி இந்த நபரை கண்டால் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..