பிறந்த குழந்தையை வெட்டி கடலில் வீசிய கொடூர தாய்..!! கேரளிவில் நேர்ந்த கொடூரம்..!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே அஞ்சு தெங்கு கடற்கரை என்ற கிராமம் உள்ளது. அந்த கடற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை கை மற்றும் கால் ஒடிந்த நிலையில் இருந்துள்ளது இதனை கண்ட பொது மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை பற்றி காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்திற்குள் பிறந்த குழந்தையை தொலைத்தவர்கள் பற்றி விசாரணை செய்துள்ளனர். அதில் அஞ்சு தெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்மணி என்பவரை கண்டு பிடித்துள்ளனர்.
அந்த பெண்மணியிடம் விசாரணை மேற்கொள்வதற்காக காவல் நிலையம் அழைத்துள்ளனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான ஜூலி.., எனக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என கூறியுள்ளார், சந்தேகித்த காவலர்கள் ஜூலியை திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர்,
அதில் அவர் கர்ப்பமாக இருந்தது மற்றும் குழந்தையை பிரசவித்தது அனைத்தும் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகித்த போலீசார் ஜூலியிடம் விசாரணையை கடுமையாக்கியுள்ளனர்.
அப்பொழுது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது. ஜூலிக்கு திருமணம் ஆகி கடந்த 12 வருடங்களுக்கு முன் கணவர் இறந்து உள்ளார். கணவனை இழந்த ஜூலிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நட்பு என தொடங்கிய பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த உறவால் ஜூலி கர்ப்பமாகி உள்ளார். கணவனை இழந்த பின் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் மானக்கேடு என நினைத்த ஜூலி குழந்தை பிறந்ததும்.., குழந்தையின் மூச்சை நிறுத்தியுள்ளார், பின் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி.., புதைத்துள்ளார், புதைத்த பின் துறுநாற்றம் வரும் என நினைத்த ஜூலி வெட்டிய குழந்தையின் உடலை கடலில் வீசியுள்ளார். எனவே குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ஜூலியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Discussion about this post