கர்ப்பமாக இருக்கும் பொழுது பல் பிடுங்கலாமா..? கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு..!
கர்ப்பகாலத்தில் பெண்கள் பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும் முதல் சந்தேகமே கர்ப்பகாலத்தில் என்ன வகையான உணவு சாப்பிடலாம்..? மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாமா..? என்று எல்லாம் இருக்கும். அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் கர்ப்பகாலத்தில் பல் பிடுங்கலாம் என்று.., அது பற்றி விரிவாக பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர்.
கர்ப்பகாலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் வலி ஏற்படும் அதை சரி செய்துக்கொள்ளலாம்.., ஆனால் கர்ப்பகாலத்தில் பல் பிடுங்காமல் இருப்பது தாய் மற்றும் சேய்க்கு நல்லது.
கர்ப்பகாலத்தில் பற்களை ஸ்கேலிங் மூலம் சுத்தம் செய்துக்கொள்ளலாம் அது பாதிப்பை ஏற்படுத்தாது.
கர்ப்பகாலத்தில் ஈறுகளில் கிருமி தொற்று ஏற்படும்.., அவை ரத்தத்தில் கலப்பதால் குறை பிரசவத்திற்கு வலி வகுக்கும், எனவே தான் மருத்துவர்கள் அந்த சமையத்தில் குறிப்பிட்ட பேஸ்ட்களை மட்டும் ரெகமண்ட் செய்வார்கள்.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஈறுகளில் வலியோ அல்லது ரத்த கசிவோ ஏற்பட்டால் பல் மருத்துவரை உடனே அணுகி சிக்கிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பகாலத்தில் எந்த மருத்துவரும் பற்களை பிடுங்க அனுமதிப்பதில்லை.., அது தாயை மட்டுமின்றி குழந்தையையும் பாதிக்கும் கர்ப்பகாலத்தில் பற்களில் பிரச்சனை ஏற்பட்டால் சிகிச்சை மட்டுமே அதாவது பற்களை க்ளீனிங் செய்வது மாத்திரை எடுத்துக்கொள்வது இது மட்டுமே செய்ய முடியும்.
கர்ப்பகாலத்தில் பற்களை பிடுங்கும் பொழுது அவை வீக்கத்தையும்.., காய்ச்சலையும் ஏற்படுத்தும். அந்த காய்ச்சல் நாளடைவில் ஜென்னி வைத்து விடும் எனவே இந்த சமையத்தில் பல் பிடுங்குவதை தவிர்க்கலாம்.
Discussion about this post