அதிமுகவில் இருந்து 7 பேரை நீக்கம் செய்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுகவின் இரு நிர்வாகிகள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், மறைமுக தேர்தலின் முடிவில் திமுகவைச் சேர்ந்த 25வது வார்டு உறுப்பினர் அய்யம்மாள் நகர்மன்றத் தலைவராக தேர்வு பெற்றார். இவருக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவை சேர்ந்த 7 வார்டு உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் கட்சியில் இருந்து 7 பேரை நீக்கம் செய்துள்ளோம்.
அதன்படி,
*திரு. R. ஜெகதீசன், (சின்னமனூர் நகர 10-ஆவது வார்டு கழகச் செயலாளர்,நகர மன்ற வார்டு உறுப்பினர் )
*திருமதி S. உமாராணி, (சின்னமனூர் நகர மன்ற 13-ஆவது வார்டு உறுப்பினர்)
*திருமதி T. கவிதா ராணி, (சின்னமனூர் நகர மன்ற 14-ஆவது வார்டு உறுப்பினர்)
*திரு. V. பிச்சை கணபதி, (சின்னமனூர் நகர மன்ற 18-ஆவது வார்டு உறுப்பினர் )
*திருமதி M. செல்வி, (சின்னமனூர் நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி, நகர மன்ற 22-ஆவது வார்டு உறுப்பினர் )
*திரு. T.தவசி., (சின்னமனூர் நகர தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர், நகர மன்ற 26-ஆவது வார்டு உறுப்பினர்)
*திரு. P.ராஜேந்திரன், (திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டவர்) (சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) ஆகியோர்,
இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.