கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி ஓம் பிரகாஷை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி ஓம்பிரகாஷ் குடும்பத்துடன் பெங்களூரு எச்எஸ்ஆர் லே அவுட்டில் வசித்து வந்தார். 1981 பேட்ஜ் அதிகாரியான ஓம் பிரகாஷ் கடந்த 2015ல் மாநிலத்தில் 38வது போலீஸ் டிஜிபியாக பதவி வகித்தவர். இவருக்கும் மனைவி பல்லவிக்கும்ட குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. பல்லவியையும் அவரின் மகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவதாவ அடிக்கடி ஓம்பிரகாஷ் மிரட்டி வந்துள்ளார்.
இது தொடர்பாக, பல்லவி போலீசில் புகார் அளித்தும் ஒம் பிரகாஷிடத்தில் இருந்து துப்பாக்கி பறிக்கப்படவில்லை. போலீஸ் அதிகாரிகள் மனைவிகளுக்கான வாட்சப் குழுவில் பல்லடி,தனது கணவர் தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அவரின் வீட்டில் ஓம்பிரகாஷ் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்த போலீசார் விசாரணையில், பல்லவியே கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. கணவரைக் கொன்ற பிறகு மற்றொரு போலீஸ் உயரதிகாரியின் மனைவிக்கு அந்த மிருகத்தை கொன்று விட்டேன் என்று பல்லவி மெசேஜ் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.