நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஒரு கிராமத்துக்கே செருப்புகளை வாங்கி அனுப்பி வைத்துள்ளார். இதற்கு காரணம் என்ன? Pawan Kalyan sends footwear to villege people
ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டத்திலுள்ள தும்ப்ரிகூடா மாவட்டத்திலுள்ள பேடாபாடு கிராமத்துக்கு பவன் கல்யாண் சென்றிருந்தார். அப்போது, கிராமத்தில் வசித்த யாரும் காலில் செருப்பு அணிந்திருக்காததை கவனித்தார். முதியவர்கள் கூட காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் நடப்பதை கண்டு அதிர்ந்து போனார். பின்னர், அமரவாதி திரும்பிய பவன் கல்யாண், அந்த கிராமத்தில் எத்தனை குடும்பத்தினர் வசிக்கின்றனர் என்பதை தனது அலுவலக ஊழியர்களை வைத்து கணக்கு எடுத்தார். சுமார், 350 குடும்பங்கள் அந்த கிராமத்தில் வசித்தனர்.
பின்னர், அங்குள்ள ஒவ்வொரு மக்களுக்கும் செருப்புகளை வாங்கி அனுப்பி வைத்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புத்தம் புது செருப்பு வழங்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் மனம் மகிழ்ந்து போனார்கள். எங்கள் கிராமத்துக்கு பல தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். ஆனால், யாரும் எங்கள் கஷ்டங்களை கண்டு கொண்டதில்லை. ஆனால், பவன் சார், எங்கள் பிரச்னைகளை புரிந்து கொண்டு உடனடியாக செருப்புகளை வாங்கி அனுப்பியுள்ளார். எங்கள் கிராமமே அவருக்கு நன்றி கூறி கொள்கிறது என்கின்றனர். Pawan Kalyan sends footwear to villege people