கோவையில் கார் வெடித்த விவகாரம் விசாரணையில் பூதகரமாகியுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள் சந்திப்பு நடத்தினர்.
இது குறித்து ஜமாத் அமைப்புகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூரியபோது, என்ஐஎ விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தை நிகழ்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் சமூக தொடர்பு இல்லாத இளைஞர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்க படம் என்றும் மேலும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு கவுன்சலிங் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் செய்தியாளர் சந்திப்பில், குற்ற செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தோடு பரிமாறி கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிகள் குறித்தும் விவாதித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.